திருவண்ணாமலை குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்.இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சி சேர்ந்தவர் விஜய்(32), கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 சிறுமியை காதலித்து குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது, இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.காஞ்சனா, தொழிலாளி விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தார்.
Tags : திருவண்ணாமலை குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்.இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை



















