தமிழ்நாட்டில் வட மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் .

by Admin / 25-10-2025 02:34:36pm
தமிழ்நாட்டில் வட மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் .

இன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வட மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது.. சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 27ஆம் தேதி மோந்தா புயலாக வலுப்பெறும் .. இதன் காரணமாக ,தமிழ்நாட்டின், வட மாவட்டங்களில் அதிக அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் .மாலை, இரவு நேரங்களில் மழை தொடர கூடும் .  புயல் காரணமாக, வட மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via