ராகுல் காந்தி கார் தாக்கப்படவில்லை - காங்கிரஸ் விளக்கம்

by Staff / 31-01-2024 04:38:04pm
ராகுல் காந்தி கார் தாக்கப்படவில்லை - காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பயணம் செய்த கார் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என தமிழக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல்காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது. அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது என விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories