ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது. 

by Editor / 05-12-2024 10:12:43am
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது. 

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர். படகுகளை மோதவைத்து சேதம் ஏற்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை கண்டித்து மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள்காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
 

 

Tags : ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது 

Share via