வருமான வரித்துறை சோதனை நிறைவு

by Staff / 09-11-2023 11:56:28am
வருமான வரித்துறை சோதனை நிறைவு

திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. கடந்த 3-ம் தேதி காலை சோதனை தொடங்கிய நிலையில், கடந்த 6 நாட்களாக சோதனை நீடித்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சோதனை குறித்து டெல்லியில் இருந்து தகவல் வெளியாகும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via