பல்லடம் அருகே தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது-போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் அருகருகே வசித்து வருபவர்கள் உத்மராஜ் மற்றும் சஞ்சய் குமார். இருவரும் கடந்த 25ம் தேதி இருவரும் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு காலையில் வெளியே வந்து பார்த்த போது வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து உத்மராஜ் மற்றும் சஞ்சய் குமார் இருவரும் பல்லடம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை மாதப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 4 பேர் அதிவேகமாக இரண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரை அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்த போது திருப்பூரை சேர்ந்த தனசேகரன், தஞ்சாவூரை சேர்ந்த சக்திவேல், செல்லப்பாண்டி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் அறிவொளி நகர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் விசாரணையில் இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : பல்லடம் அருகே தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது-போலீசார் அதிரடி நடவடிக்கை.