குற்றாலம் மகளிர் கல்லூரியில் மக்களின் காவலன் - போலீஸ் அக்கா திட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

by Editor / 25-10-2024 11:25:19pm
குற்றாலம்  மகளிர் கல்லூரியில் மக்களின் காவலன் - போலீஸ் அக்கா திட்டம் குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

 தென்காசி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு காவல் துறையினர், மக்களின் காவலன் - போலீஸ் அக்கா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்    குற்றாலம் மகளிர்  கல்லூரிக்கு நேரில் சென்று  மக்களின் காவலன் மற்றும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தியதோடு ஏதேனும் பிரச்சனை அல்லது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் கல்லூரிக்கென்று வழங்க ப்பட்டுள்ள போலீஸ் அக்கா எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என்றும்  ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்வின்  இறுதியாக,மாணவிகள் ,"குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது நடைபெறுவது தெரிய வந்தாலோ, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம் .மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சியும் எடுப்போம் என்று   உறுதிமொழி  ஏற்படுத்துக் கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி மற்றும் காவல் துறையினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்

. தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181.ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

 

Tags : குற்றாலம் மகளிர்  கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

Share via