முக அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை சிவரக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அங்கு தயா பொறியியல் கல்லூரி கட்டியதாக மூக்கு அழகிரி மற்றும் ஏழு பேர் மீது 2016 ஆம் ஆண்டு நில அபகரிப்பு தடுப்பு பிரிவினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு விசாரித்த கிழமை நீதிமன்றம் சில குற்றச்சாட்டுகளிலிருந்து முக அழகிரி விடுவித்து 2021 இல் உத்தரவிட்டது.. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை விசாரித்து அழகிரி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கை முழுமையாக எதிர்கொள்ள உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மு. க .அழகிரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
Tags :


















