தனியார் நிதி நிறுவனத்தில் 5லட்சம் ரூபாய் வசூல்பணம் கையாடல் 1 0 ஊழியர்கள் மீது வழக்கு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ் என்கிற தனியார் நுண்கடன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த தனியார் நிதி நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.இந்த தனியார் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணத்தை மாதா மாதம் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வசூல் செய்து இந்த நிதி நிறுவனத்தில் வரவு வைப்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தினேஷ்குமார், சந்தியா,பிரவீணா, ரூபன், ஸ்ரீகாந்த் ராஜேந்திரன் சுந்தர் ராஜதுரை உதய பிரகாஷ் மணிகண்டன் உள்ளிட்ட பத்து நபர்கள் கடன் வாங்கியவரிடம் ரூபாய் 5 லட்சத்து 6451வசூல் செய்து இந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் செலுத்தாமல் உள்ளதால் இந்த வங்கியின் வட்டார மேலாளர் பழனிவேல் நன்னிலம் காவல் நிலையத்தில் இந்த பத்து நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags : தனியார் நிதி நிறுவனத்தில் 5லட்சம் ரூபாய் வசூல்பணம் கையாடல் 0 ஊழியர்கள் மீது வழக்கு



















