சீட் பெல்ட் கட்டாயம்...மீறினால் அபராதம்

by Staff / 22-09-2022 12:08:56pm
சீட் பெல்ட் கட்டாயம்...மீறினால் அபராதம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து மத்திய அரசு சாலை பாதுகாப்பு விதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் கார்களில் முன் இருக்கையில் மட்டுமல்ல, பின் இருக்கையில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதியாக உள்ளது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் முன் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கு மட்டுமே அலாரம் பொருத்துகின்றன.

முன் இருக்கையில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இந்த அலாரம் ஒலிக்கும். இந்நிலையில், பின் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கும் அலாரம் பொருத்துவதை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக வரைவு விதிகளை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via