குஷ்புவுக்கு பதிலாக களமிறங்கிய சுந்தர்.சி..

by Staff / 15-04-2024 01:49:55pm
குஷ்புவுக்கு பதிலாக களமிறங்கிய சுந்தர்.சி..

எலும்பு முறிவு சிகிச்சையால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து பாஜகவின் குஷ்பு விலகினார். அவருக்கு பதிலாக கணவர் இயக்குநர் சுந்தர். சி பிரச்சாரத்தில் குதித்துள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசும்போது, “பதவியில் இல்லாத போதே மக்களுக்குத் தேவையான பல உதவிகளை செய்த அவர் தேர்தலில் வென்றால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். நீங்கள் தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பப் போவது, எம்.பி-யை அல்ல. மத்திய அமைச்சரை” என்றார்.

 

Tags :

Share via