தேச நலனை கருத்தில் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் மோடி வலியுறுத்தல்

by Editor / 20-10-2021 03:52:08pm
 தேச நலனை கருத்தில் கொண்டு ஊழலை  ஒழிக்க வேண்டும் மோடி வலியுறுத்தல்


‘‘தேச நலனை மனதில் கொண்டு ஊழலை அதிகாரிகள் ஒழிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
குஜராத் மாநிலத்தில் நடநடத சிபிஐ மற்றும் சிவிசி மாநாட்டில் பிரதமர் மோடி  காணொலி மூலம் பேசுகையில், ‘‘நல்ல ஆட்சி தர வேண்டும். அதே நேரம் ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன். தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும். இடைத்தரகர்களுக்கு இடம் கொடுக்க கூடாது. ஊழல்வாதிகளை பிடிப்பது முக்கியம் என்றாலும் ஊழல் நடக்கும் முன்பே தடுப்பது அதைவிட முக்கியம். நாட்டில் அதிகரித்து வரும் ஊழலை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்திய மக்களிடம் உருவாக்குவதில் கடந்த 6-7 ஆண்டுகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’.


ஊழலை ஒழிப்பதன் மூலம் அதிகாரத்துவ செயல்முறைகளை நெறிப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவிய வழிகளைப் பற்றி பேசிய பிரதமர், அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான நீண்ட வரிசைகள் இப்போது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் இப்போது ஊழல் இடைத்தரகர்களை இடைத்தரகர்கள் இல்லாமல் இணையதளங்களிலிருந்து நேரடியாக அரசு திட்டங்களின் நன்மைகள் பெற முடியும் என்று இன்று நாடு நம்புகிறது என்றார். புதிய சிந்தனைகள், செயலாக்கம் அவசியம் என்பதை அறிவுறுத்திய மோடி, பகிரங்கமான அதாவது ஒளிமறைவுமின்றி நடைமுறை வேண்டும். சுமுகமான நல்லாட்சி வழங்கப்பட வேண்டும். புதிய யுக டிஜிட்டல் சாதனங்கள் மூலம் இது சாத்தியம்.


ஊழல், அமைப்பின் ஒரு பகுதி என்று புதிய இந்தியா நம்பத் தயாராக இல்லை. திறமையான செயல்முறை, மென்மையான நிர்வாகம் ஆகியவற்றை தான் விரும்புகிறது என்று பேசினார்.

 

Tags :

Share via