இலங்கை அதிபராக அனுரா குமார திச நாயக்க வெற்றி.

by Admin / 22-09-2024 08:44:24pm
இலங்கை அதிபராக அனுரா குமார  திச நாயக்க வெற்றி.

இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது.38 பேர் போட்டியிட்ட தேர்தலில் மூன்று பேர்களுக்கு இடையில் பலமான போட்டி நிலவி வந்த சூழலில்,காலையில் வாக்கு எண்ணிக்கையின் பொழுது அனுரா குமார திச நாயக்க ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வாக்குகளை பெற்றதால் அவர் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் . இறுதி கட்ட சூழலில் வாக்குகளின் உடைய விகிதங்கள் மாறுபட்ட பொழுது யாருக்கு வெற்றி வாய்ப்பு என்கிற நிலை தொடர்ந்தது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில், இரண்டாவது முறையாக வாக்குகள்மீண்டும் எண்ணப்பட்டு தற்பொழுது அனுரா குமார திச நாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 2009 க்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊழல் போன்றவற்றை மாற்றுவேன் என்று கூறியதன் காரணமாக இவர் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அதிபராக பதவி ஏற்க உள்ளார்.. பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் அக்கட்சியின் தலைவராக உருவானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via