லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில்...
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீடுகள், வணிக வளாகங்கள் என்று அனைத்தும் எரிந்து சாம்பலாகி எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. இந்தக் காட்டு தீயின் காரணமாக தொடர்ச்சியாக தீயணைப்பு துறையினரும் வனத்துறையினரும் தனித்தனியாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் 35 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான இடங்களை காட்டு தீ எரித்து நாசமாக்கி உள்ளது. அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் கலிபோர்னியா ஒன்று.
தீயில் கருகி பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 10,000 க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. போர்க்களம் போன்று லாஸ் ஏஞ்சல்ஸ் காட்சியளிக்கிறது .தொடர்ந்து இறப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீ முழுவதுமாக அணைக்கப்படாதின் காரணமாக பலத்த காற்றுகளுக்கு இடையில் தீ பரவிக் கொண்டிருப்பதால், மேலும் அழிவுகள் தொடரும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீயில் இதுவரை 11 பேர் எரிந்து சாம்பலானதாகவும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பல விலை உயர்ந்த பொருள்கள் எரிந்து நாசமாகியதோடு வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்டவைகளும் இந்த தீக்கு இரையாகி உள்ளது. வீடுகளை இழந்தவர்கள், பொருட்களை இழந்தவர்கள் கதறும் காட்சி வேதனைக்குரியதாக உள்ளது. இதனிடையே காட்டுத் தீயில் இருந்து தப்பியவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருந் தீயை அணைப்பதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஒரு காரணமாக உள்ளது. ஹெலிகாப்டர் வழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புத் துறையினர் போராடி வருகிறார்கள். பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே எரிந்து வரும் தீயிலிருந்து பொருள்களை களவாடி செல்லும் கொடூர நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சட்டத்துறை பல காவலர்களை நியமித்து இரவு நோன்பு பணிகளை தீவிர படுத்தியதோடு, ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொருட்களை கொள்ளை அடித்ததாக இருவது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசிபிக் பாலி சேட்ஸ் முழுவதும் தீயில் கருகிய வீடுகள் வாகனங்கள் என்று அனைத்தும் சாம்பலான நிலையில் வெற்றெழும்பு கூடுகலாக காட்சி அளிக்கப்படுகின்றன.
மலைப்பிரதேசமாக- நிறைய வன விலங்குகளை உடைய பகுதி இப்பொழுது பல அரிய வகை விலங்குகளை தீக்கு காவு கொடுத்து கண்ணீரோடு காட்சி தருகின்றது.
Tags :



















