பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் 5 ஆண்டு ரத்து.

by Editor / 05-07-2024 09:52:11am
பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் 5 ஆண்டு ரத்து.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் அருகே உள்ள சுக்கம்பட்டி அருகில் கடந்த 12ம் தேதி டாரஸ் லாரி ஒன்று மெதுவாக சென்றது இதனை தொடர்ந்து வந்த இரண்டு டூவீலரும் மெதுவாக சென்ற நிலையில் அந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த தனியார் பேருந்து டூவீலர்கள் மீது மோதி லாரியுடன் சேர்ந்து டூவீலர்கள் நசுங்கியது இந்த கோர விபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர்  பகுதியை சேர்ந்த முருகன், அவரது மனைவி நந்தினி, குழந்தை கவின், ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் இன்னொரு டூவீலரில் சென்ற குப்பனூர் பகுதியை சேர்ந்த வேதவள்ளி ,அவரது சகோதரி வீரம்மாளின் மகள் ரித்திகா ஆகியோர் பலியாகினர் மேலும் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பட்டனர் இந்த நிலையில் தொடர்பாக வீரனும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேஷை கைது செய்து பின்னர் அவரை சேலம் சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரமேஷின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் விபத்து தொடர்பாக ஓட்டுனரிடம் விளக்கம் கேட்டு சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் ஓட்டுனர் தனது விளக்கத்தை சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அளித்தார் மேலும் இதனை பரிசீலனை செய்து அதிகாரிகள் வேகமாகவும்,கவன குறைவாகவும், தனியார் பேருந்து ஓட்டுச் சென்று 5 பேரின் உயிரிழப்பு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேசின் ஓட்டுநர் உரிமத்தை ஐந்து ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags : பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் 5 ஆண்டு ரத்து

Share via