உணவு திருவிழாவில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆண்டுதோறும் மட்பக் என்ற பெயரில் நடைபெறும் உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிலை இந்த ஆண்டிற்கான திருவிழாவின்போது புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
Tags :