நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ

by Staff / 02-05-2022 02:34:33pm
நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வேகமாக பரவி வருகிறது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் தீ மளமளவென பள்ளத்தாக்கு வழியாக கல்லினாஸ்  மற்றும் தெற்கு பகுதியை நோக்கி பரவி வருகிறது ஒரு வாரத்திற்கு முன்பாக பள்ளத்தாக்கில் பரவிய தீ ஹேர்மிட் மலைப்பகுதியில் பரவியஒன்றாக சேர்ந்ததாகும் அப்போது முதல் 97 ஆயிரத்து 64 ஏக்கர் பரப்பிலான வடபகுதி எறிந்ததாகவும் 32% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தீ மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மேற்கொண்டு வரும் நிலையில் பல பகுதிகளில் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo