சூரத் நகரில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ: 2 பேர் பலி 125 பேர் உயிரோடு மீட்பு

by Editor / 18-10-2021 03:44:05pm
சூரத் நகரில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ: 2 பேர் பலி 125 பேர் உயிரோடு மீட்பு

சூரத் பேக்கேஜிங் தொழிற்சாலையில் திங்கள்காலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.


குஜராத் மாநிலம் சூரத் நகரின் கடோதரா பகுதியில் வரேலி எனுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்றி இயங்கிவருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியில் இருந்தனர். அவர்கள் விரைவாக அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றனர்.


தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாடியில் நின்று கொண்டு ஐயோ, தீ... தீ... காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று தொழிலாளர்கள் அபாயக்குரல் கொடுத்தனர். அதையடுத்து ஹைட்ராலிக் கிரேன் உதவி மூலம் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.


தீ விபத்து குறித்து கடோதரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் படேல் கூறுகையில், இந்த ஆலையின் முதல் தளத்தில் தீப்பிடித்து விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியது. எனினும்,தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo