தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி

நம் நாட்டில் தக்காளி விலை பெருமளவில் உயர்ந்து வருவதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் ஒரு விவசாயி தக்காளி விற்று கோடிகளில் லாபம் எடுத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. தம்தாரி மாவட்டத்தில் உள்ள பிரான் கிராமத்தைச் சேர்ந்த அருண் சாஹு 150 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்தார். இதனை அடுத்து நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 தக்காளி பெட்டிகளை விற்பனை செய்தார். இந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் இந்த விவசாயி சம்பாதித்துள்ளார். உயர்கல்வி படித்த சாஹு, விவசாயத்தின் மீது ஆசை கொண்டு சாகுபடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
Tags :