யாசகம் பெறும் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த இருவர் கைது.

by Editor / 13-04-2023 10:29:38am
யாசகம் பெறும் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த இருவர் கைது.

மதுரை கீரைத்துரை பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மனைவி துர்கா தேவி. கணவன் இல்லாத நிலையில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஜெய்ஹிந்த்  பகுதியை சேர்ந்த சித்தன் மற்றும் மேலவாசல் பகுதியை சேர்ந்த நாகராஜ் இருவரும் இந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தனர்.துர்காதேவியின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த திடீர் நகர் போலீசார் வினோத் மற்றும் நகராட்சி கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo