9ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது.. வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்புப் பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விடுதியில் இருந்து வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் பெற்றோர் ஸ்கேன் செய்து பார்த்தனர். சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பரிசோதனைக்கு பிறகு 8 மாத கர்ப்பிணியான சிறுமிக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். இச்சம்பவம் ஜனவரி 9ஆம் தேதி நடந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதற்கு காரணம் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















