ஆசிரியரின் தலை துண்டிப்பு
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் வைத்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். இந்நிலையில், மிக்வே மாகாணம் தவுங் மையிட் கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சா டுன் மொய்(46), ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் நேற்று ராணுவத்தினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படட் அவரை கடந்த ஒரு ஆண்டாக மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடம் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்பு பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளனர். அந்த தலையை பள்ளியின் கேட்டில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்தும் இந்த படுகொலை அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
Tags :