குற்றால சாரல் திருவிழா இன்று நிறைவு பெற்றது.

by Editor / 12-08-2022 11:12:23pm
குற்றால சாரல் திருவிழா இன்று நிறைவு பெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வந்த சாரல் திருவிழாவானது, கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின்  காரணமாகவும், மழை இல்லாத காரணமாகவும் நடத்தபடாமல் இருந்தது.

இந்த நிலையில், இந்த வருடம் சாரல் திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்ட மாவட்ட நிர்வாகம், சாரல் திருவிழா, உணவுத்  திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா என்று 4 விழாக்களை ஒருங்கிணைத்து பொதிகை பெருவிழா என்ற பெயரில்  நடத்தப்பட்டது.

 குற்றாலம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்த பொதிகை பெருவிழாவில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, சாரல் திருவிழாவில் தினமும் பல்வகை கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுக்கள், மலர் கண்காட்சி, தோட்டக்கலை துறை சார்பில் காய்கனி கள் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகுபோட்டி,ஆண் அழகன் போட்டி,கொழு..கொழு குழந்தைகள் போட்டி,புத்தக கண்காட்சி, உணவுத் திருவிழா, பட்டிமன்றம், பரத நாட்டியம்,கேரள மாநில கலைநிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநில நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாட்டின் பாராம்பரியமான கலை நிகழ்ச்சிகள் என தினமும் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்றன.இதனை இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டு கலித்த நிலையில் இறுதி நாளன 8வது நாள் விழாவில் பழமையான கார் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்று. விழா நிறைவு விழா வை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்,மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குற்றால சாரல் திருவிழாவில் பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு :-

சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு தனி நிதியாக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றாலத்தில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உலக தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக குற்றாலத்தை மாற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றாலத்தில் வருடம் தோறும் நடைபெறும் சாரல் விழாவினை அடுத்த வருடம் மிக சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

தற்போது, தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை குண்டாறு அணையை புதிய சுற்றுலா தள திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு Eco டூரிஸ்ட் ஹோமில் உள்ளது போல் டெண்ட் போட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையிலும், நீரில் செய்யும் பல்வேறு சாகச விளையாட்டுகளை விளையாடும் வகையிலும் குண்டாறு அணை சுற்றுலா தளமாக மாற உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.என்றார்.
 

குற்றால சாரல் திருவிழா இன்று நிறைவு பெற்றது.
 

Tags :

Share via