விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

by Staff / 13-02-2024 12:45:39pm
விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லியை நோக்கி அணி அணியாக விவசாயிகள் பேரணி நடத்திவரும் நிலையில், விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி - அம்பாலா எல்லையில் சாம்பு என்ற இடத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் டெல்லி எல்லை புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories