மது போதையில் தாயை திட்டிய  இளைஞரை கத்தியால் குத்திகொலை செய்தவர் கைது.

by Editor / 23-06-2024 12:23:10am
 மது போதையில் தாயை திட்டிய  இளைஞரை கத்தியால் குத்திகொலை செய்தவர் கைது.

கடையநல்லூர் மேல கடையநல்லூர்  வன்னியப் பெருமாள் மகன் கண்ணன் (25) இவர் கூலித் தொழிலாளி இவர்  மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியில்  குடியிருக்கும் கிருஷ்ணன் மகன் முருகன் வயது 43 கூலி வேலை செய்து வருகிறார்
மாலை முருகனின் தாய் செல்லம்மாள் வீட்டு வாசலில் இருந்து கொண்டிருந்த பொழுது
  உறவினரான கண்ணன் மது போதையில் மூதாட்டி செல்லம்மாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது இதனைக் கண்ட  மகன் முருகன் மது போதையில் இருந்த கண்ணனை தன் தாயிடம் தகராறு செய்யாதே என கூறியதால் இருவருக்கும் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது  உடனே முருகன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து   கண்ணனை பல்வேறு இடங்களில் குத்தி கிழித்து விட்டு தப்பி ஓடினார் 
உடனே கண்ணன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கண்ணனை 
  மீட்டு  கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இங்கே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக  தென்காசி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கே சிகிச்சை பெற்ற நிலையில்   இரவு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.  

 

Tags :  மது போதையில் தாயை திட்டிய  இளைஞரை கத்தியால் குத்திகொலை செய்தவர் கைது.

Share via