மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம் மோடி என்ன பராமாத்மாவா, கடவுளா?

by Staff / 10-08-2023 01:30:37pm
 மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம் மோடி என்ன பராமாத்மாவா, கடவுளா?

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வராதது பற்றி மாநிலங்களவையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, “அவர் இன்று வருவார். எதிர்க்கட்சியை கிழிக்கப் போகிறார்” என பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் கார்கே, “மோடி என்ன பராமாத்மாவா, கடவுளா? வரட்டும், பார்த்துக் கொள்கிறோம்” என ஆவேசமாக பதிலளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo