காதலனை கட்டி வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 10 பேர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவர் கடற்கரைக்கு இரவு நேரத்தில் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 10 பேர் கும்பல், காதலனை கட்டி வைத்து விட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கோபால்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளனர்.
Tags :