இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக, இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ் ஐ ஆர் செயல்முறை குறித்து உடனடி மற்றும் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த செயல்முறை மோசடியான வாக்காளர் நீக்கத்திற்கும் தேர்தல் நிலை அலுவலர் மீது பெரும் அழுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். .மக்களவை மாநிலங்களவை இரண்டிலும் ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் எழுந்ததால் அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியான முறையில் விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறி நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று எதிர் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், விவாதங்களுக்கான காலக்கெடுவை எதிர்க்கட்சிகள் ஆணையிட முடியாது என்றும் அவர் கூறினார். இவ் இடையூறுகளுக்கு மத்தியில் மக்களவை ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றியது .
Tags :

















