அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து பலி

திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (54). அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களாக வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஏற்கனவே இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்களுக்கு வட்டி, அசல் கொடுப்பதற்கு முடியாமல் தவித்துள்ளார். மனமுடைந்த சீனிவாசன் குடிபோதையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார்.
Tags :