இன்று உலக மக்கள் தொகை தினம் முதலிடத்தில் இந்தியா.

by Staff / 11-07-2025 10:51:47am
இன்று  உலக மக்கள் தொகை தினம் முதலிடத்தில் இந்தியா.

இன்று (ஜூலை. 11) உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகள் குறித்து காண்போம்.இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 23 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை விட அதிக மக்களை கொண்ட மாநிலமாக உள்ளது. இதன் பரப்பளவு அதிக மக்கள் தொகைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 829 பேர் என்ற மக்கள் தொகை அடர்த்தியுடன், 240,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது.
1. இந்தியா- 146 கோடி
2. சீனா - 142 கோடி
3. அமெரிக்கா - 34.7 கோடி
4. இந்தோனேசியா - 28.6 கோடி
5. பாகிஸ்தான் - 25.5 கோடி
6. நைஜீரியா - 23.8 கோடி
7. பிரேசில் - 21.3 கோடி
8. வங்காளதேசம் - 17.6 கோடி
9. ரஷ்யா - 14.4 கோடி
10. எத்தியோப்பியா - 13.5 கோடி

 

Tags : Today is World Population Day, with India at the top.

Share via