“ஆங்கிலேயர்களை எதிராக கிளர்ச்சி செய்தவர் அழகுமுத்துக்கோன்” - விஜய் பதிவு

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர் மாவீரர் அழகுமுத்துக்கோன். வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசியவர். பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்தார். அவரது பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :