பல் வலியா ..நோ டென்ஷன் 

by Editor / 19-04-2021 07:33:13pm
பல் வலியா ..நோ டென்ஷன் 

 

பல் வலியிருந்தால் காலப்போக்கில் அது ஈறுகள் மற்றும் தலை வலிக்கும் காரணமாகிவிடும். பற்கள் சுத்தமாக இல்லாமல் இருப்பதே பல் வலிக்கு முக்கிய காரணமாகும். ஆயுர்வேதம் மிகவும் பலனளிக்கும் வீட்டு மருந்தை இருப்பதால் இது எந்தநேரமும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பலவேறு விதங்களில் பரிகாரம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் உள்ள பல பொருட்கள் பல் வலியை போக்கும்.
வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின் என்ற சத்து உள்ளது. இது மிகவும் நல்ல நஞ்சு நாசினி. பாக்டீரியாக்களால் உண்டாகும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து வீக்கத்தை குறைத்து பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். தினமும் வெள்ளை பூண்டை உண்டால் இது வாயை சுத்தமாக்கும். ஒரு வெள்ளைப்பூண்டு பல்லை நறுக்கிக்கொண்டு அத்துடன் சிறிது கல் உப்பு சேர்த்து வலி இருக்கும் பகுதியில் வைத்துவிடவும். அடிக்கடி இப்படி செய்தால் பல் வலி குறைந்துவிடும்.
டீ பை : சூடாக இருக்கும் டீ பை பல் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். டீயில் பல நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதில் உள்ள இயற்கையான மருத்துவ குணங்கள் உடனே பல்வலிக்கு பரிகாரம் தரும். சூடான டி பையை வலி இருக்கும் பல் மீது வைக்கவும். பின்னர் இந்த பையை நன்றாக அழுத்தவும். பையில் உள்ள ரசம் வலியுள்ள பல்லுக்குள் செல்ல வேண்டும். அப்போது பல் வலி மெல்ல மெல்ல குறையும்.
எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமாய் உள்ளது. இது பல் மற்றும் ஈறுகளை வலுவாக்குவதுடன் இழைகள் உருவாகாமல் தடுக்கும். எலுமிச்சை வாய் துர்நாற்றத்தையும் போக்கும். சற்று எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டு அதை வலி உள்ள பகுதியின் மீது மசாஜ் செய்யவும். தினமும் இரண்டு முறை இப்படி செய்தால் பல் வலி நீங்கும்.
கொய்யா இலைகள்: கொய்யாய் இலைகளில் நோய் எதிர்ப்பு குணங்கள் உள்ளது. இது பலவித வலிகளை போக்கும். இதில் உள்ள பிளாவ நாய்ட் பாக்டீரியாக்களின் செயல் பாடுகளை தடுப்பதுடன் வீக்கத்தை குறைக்கும். கொய்யாய் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விடவும். அந்த நீரை வடிகட்டி வாயில் ஊற்றி அடிக்கடி கொப்பளிக்கலாம். வலி குறையும் வரை இப்படி செய்யலாம்.
புதினா எண்ணெய் : புதினா எண்ணெயில் மிகவும் சக்தி வாய்ந்த பாக்டீரியா நாசினி குணங்கள் கொண்ட மென்தால் என்னும் பொருள் உள்ளது. இது அனைத்து வித பாக்டீரியாவையும் அழிக்கும். தவிர பற்களை சுத்தமாகவும் வைத்திருக்கும். இதனாலேயே புதினா எண்ணெயை பெரும்பாலான பற்பசைகளில் பயன்படுத்துகிறார்கள். புதினா எண்ணையை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு அதை தொட்டு வலி இருக்கு ம் பகுதியில் மசாஜ் செய்யவும்.
ஆல்கோஹால் உள்ள மௌத் வாஷ் : ஆல்கோஹாலில் நோய் தீர்க்கும் குணமுள்ளது . இது பாக்டீரியாக்களை நிரந்தரமாக அழிக்கும். ஆனால் இதை நேரடியாக உபயோகிக்கக்கூடாது. ஆல்கோஹால் உள்ள மௌத் வாஷ்களால் வாயை கொப்பளித்தால் பல் வலி எளிதில் குணமாகும்.
உப்பு நீர் : உப்பு நீரால் வாயை அடிக்கடி கொப்பளித்தால் பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகள் வெளியேறும். இது வீக்கத்தையும் குறைக்கும். ஒரு லோட்டா சூடு நீரில் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் இந்த நீரால் வாயை அடிக்கடி கொப்பளிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இப்படி செய்தால் பல்வலி நீங்கும்.
ஐஸ் ஒத்தடம்: வலி இருக்கும் பற்களின் மீது ஐஸ் கட்டிகள் வைக்கலாம். இது பல் மருத்துவர்களே கூட செபரிசு செய்யம் முறை. பற்களின் எந்த வித பிரச்சனைகளுக்கு ஐஸ் பயன் படுத்தலாம். ஒரு சுத்தமான கை குட்டையில் ஐஸை சுற்றிக்கொண்டு அதை பற்கள் மீது வைக்கவும். இதனால் அப்பகுதியில் உள்ள வலி மற்றும் வீக்கமும் குறையும்.
பெருங்காயம்: பெருங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வீக்கங்களை குறைக்கும் குணங்கள் உள்ளது. பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தை பெருங்காயம் நீக்க வல்லது. ஒரு துண்டு பெருங்காயத்தை நேராக வலி இருக்கும் பல் மீது வைக்கவும். வலி முழுதும் குறையும் வரை இப்படி செய்யவும்.
ஆலிவ் எண்ணெய் : பருத்தியின் ஒரு சிறிய உருண்டை செய்துகொண்டு அதை ஆலிவ் எண்ணெயில் முக்கி எடுத்து வலி இருக்கும் ஈறு பகுதியில் மெதுவாக அழுத்தினால் உடனே இல்லையென்றாலும் நிதானமாக வலி குறைய தொடங்கும்.
தேங்காய் எண்ணெய் : ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை வாயில் ஊற்றிக்கொள்ளவும். முப்பது நிமிடங்கள் வரை வாயில் இதை வைத்து அடிக்கடி கொப்பளித்து வரவும். பின்னர் அதை துப்பி விட்டு வாயை கழுவிக்கொள்ளவும். இதனால் கண்டிப்பாக பல் வலி நீங்கும்

 

Tags :

Share via