சோனியா காந்திக்கு விருந்து கொடுக்கும் முதல்வர்

by Staff / 13-10-2023 02:45:00pm
சோனியா காந்திக்கு விருந்து கொடுக்கும் முதல்வர்

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் சோனியா காந்திக்கு நாளை மதியம் முதல்வர் ஸ்டாலின் விருந்து கொடுக்கிறார். திமுக சார்பில் சென்னையில் நடக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் சென்னை வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சோனியா காந்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மதியம் விருந்து கொடுக்கிறார். இவ்விருந்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo