"பாமக சேரும் அணி வெற்றி பெறும்" - ராமதாஸ் பேட்டி

மயிலாடுதுறை: வன்னியர் மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட பூம்புகார் சென்ற ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமக எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தான் தேர்தலில் வெற்றிப் பெறும். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர, தொடர்ந்து வலியுறுத்துவோம். பிரதமர் எனது நண்பர், நிதியை கேட்டு வாங்குவோம். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றார். தொடர்ந்து, “கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை” என தெரிவித்துள்ளார்.
Tags :