ஏர் இந்தியா விமான விபத்து: இன்று அறிக்கை வெளியாக வாய்ப்பு

by Editor / 11-07-2025 12:37:48pm
ஏர் இந்தியா விமான விபத்து: இன்று அறிக்கை வெளியாக வாய்ப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியாக வாய்ப்புள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டியில் உள்ள ஆடியோ தரவுகளை கொண்டு ஆய்வு நடைபெற்றது. இந்த கோர விபத்தில் விமான பயணிகள், பணியாளர்கள் மற்றும் விபத்து நடந்த பகுதியில் இருந்த சுமார் 270 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via