பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது.

by Editor / 13-03-2024 09:36:12am
பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  தந்தை போக்சோவில் கைது.

சேர்ந்தமரம் பகுதியில் பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தந்தை போக்சோவில் கைது. காவல்துறை விசாரணை .....

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே  சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடையாலுருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருக்கு திருமணம் முடிந்து  மூன்று பெண் குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் அதில் ஒரு பெண் குழந்தைக்கு ராஜேந்திரன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவரது தொந்தரவு அதிகரித்தை  தொடர்ந்து அந்த சிறுமி மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். இந்த புகார் மனுவில் தனது தந்தை  அத்திமீறி பாலியல்  தொந்தரவு செய்து வந்ததாக  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இராஜேந்திரனை போக்சோவில்  கைது செய்தனர் .மேலும் ராஜேந்திரனை கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் கடையாலுருட்டி  பகுதியில் பெற்ற பெண் பிள்ளைக்கு தந்தை  பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது 

 

Tags : பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது.

Share via

More stories