பெரம்பூரில் முதலமைச்சா் விஜய் சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

by Admin / 14-07-2026 12:19:24am
பெரம்பூரில் முதலமைச்சா் விஜய் சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

தமிழக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் சர்மா நகரில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய அரசு சான்றிதழ்களை இ சேவை வழியாக பெறுவதற்கான இ- சேவை மையத்தை அலுவலக வளாகத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது.  பெரம்பூர் தொகுதி மக்களின் குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதாரம் சார்ந்த குறைகளை பதிவு செய்து அதனை ஆன்லைனில் கண்காணிக்கும் வகையில் ஜன சேவன வீதி என்ற சிறப்பு புகார் செயலியையும் அறிமுகப்படுத்தினார். உள்ளூர் பிரச்சனைகளை கண்காணித்து தரவுகளை ஆய்வு செய்வதற்காக அலுவலகத்தில் அதிநவீன கணினி அமைப்புகளும் குறைகளை கேட்டு அறிய பத்து நிரந்தர பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திறப்பு விழாவை தொடர்ந்து அருகிலுள்ள நியாயவிலை கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர். அங்குள்ள பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார். அத்துடன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சார பேருந்து சார்ஜிங் பணிமனையையும் பார்வையிட்டு பேருந்து உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்தார். பெரம்பூர் தொகுதியில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, கல்வி, விளையாட்டு போன்றவை குறித்தும் ஆலோசனை நிகழ்த்தினார்.

 

Tags :

Share via
Logo