இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனியில்தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags :