"இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள்" -முதல்வர் ஸ்டாலின்,

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு என தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுக்க இன்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். முந்தைய ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகாலம் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நலன்களை டெல்லியில் அடகு வைத்தார்கள். தமிழக உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.
“இந்தியை ஏற்றுகொண்டால் நிதி தருவேன் என்று சொல்கிற அராஜகம் இருக்க முடியுமா?. தமிழர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள் தமிழ்நாட்டு எம்.பி.,க்கள். இந்த போர்குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் தமிழ்நாட்டிலிருந்து வரும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைக்க சதி செய்கிறார்கள்”
ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம். வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்குத் தடைக்கல்லை போட்டு வருகிறது.என்றார்.
Tags : "இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள்" -முதல்வர் ஸ்டாலின்,