எல்லையில் திருடிய திருவனந்தபுர திருடர்கள் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தீவிர தேடல் வேட்டையில் குற்றவாளிகள் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது மகன் ஸ்ரீகாந்த்(39) மற்றும் காலகோட்டம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரது மகன் சுஜித்(21) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருட்டு நகைகள் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags : எல்லையில் திருடிய திருவனந்தபுர திருடர்கள் கைது.