தேயிலை தோட்டத்தில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய நிலையில் பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது. பகுதியில் நடந்த பத்தாம் தேதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் கண்காணிக்க 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அதனை பிடிக்க இரு இடங்களில் குண்டு வைத்த நிலையில் இன்று காலை கூண்டில் சிறுத்தை சிக்கியது இதனை தொடர்ந்து முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் கொண்டுசெல்லப்பட்ட சிறுத்தை அங்கு வனப்பகுதியில் ஒன்றில் பத்திரமாக விடப்பட்டது.
Tags :