மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர் ஓடி சென்று உதவிய காவல் துணை ஆணையர்.
நெல்லையில் இன்று நடைபெற்ற ஒண்டிவீரன் நினைவு தின நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் விரைந்து சென்று மயங்கி விழுந்த உதவி ஆய்வாளரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
Tags :



















