நல்ல உடலை பெற்று நீண்ட காலம் வாழ முடியும் .

by Admin / 19-05-2024 11:48:05am
நல்ல  உடலை பெற்று நீண்ட காலம் வாழ முடியும் .

உயிர் வாழ்வதற்காக அடிப்படை தேவைகளில் உணவு முதன்மையானது. உணவின்றி உயிர் வாழாது. அது எந்த உயிராக இருந்தாலும் உணவு, நீர், காற்று அவசியம்.  எந்த ஒரு ஜீவனும் அது விலங்காக- பறவையாக- பூச்சியாக எதுவாக இருந்தாலும் இந்த மண்ணில் ஜீவித்து கொண்டிருக்கும் அனைத்துக்கும் உணவு பொதுவானது. அது மாமிசமாக இருக்கலாம்- இல்லை, இலை தழை களாக இருக்கலாம்.. ஆனால் ,உணவின்றி எந்த ஒன்றும் உயிருடன் இருக்க முடியாது.

விலங்குகள் பறவைகள் பூச்சிகள் இயற்கையாகவே தங்களுக்கான உணவுகளை இருக்கின்றவைகளில் இருந்து எடுத்து புசித்துக் கொள்கின்றன .ஆனால், மனிதன் தான் விஞ்ஞான அறிவின் காரணமாக எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்கிற வரையறைகளை தமக்கு கிடைக்கும் உணவுப் பொருள்களில் இருந்து ஏற்படுத்திக் கொள்கிறான். அவனுக்குத் தேவையான உணவுகள் என்னென்ன சத்துகளை வழங்குகின்றன என்பதை தெரிந்து அதன்படி தங்கள் ஆரோக்கியத்திற்கு, தங்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அவன் மாமிசங்களிலிருந்தும் தானியங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கிறான். அவ்வாறு அவன் தனக்கு தேவையானவைகளை பெறுவதற்கான நிலைப்பாட்டில் ஒவ்வொன்றையும் ருசியோடு- சத்துக்கள் நிறைந்தவைகளை தேடி பெற்று ,சமைத்து உண்டு வாழ்கின்றான். இந்த நிலை மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கு இல்லை. அவை கிடைப்பவற்றை கொண்டு உயிர் வாழ்கின்றன. அவைகளுக்கு, எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இன்னவற்ற தான் சாப்பிட வேண்டும் என்கிற நிலைப்பாடும் கிடையாது.

புலி பசித்தாலும் புல்லை திங்காது என்கிற ஒரு பழமொழி உண்டு .அது இயற்கையாகவே கோரப்பல்களை கொண்டிருப்பதன் காரணமாக மாடு போன்று தட்டைப்பல் உடைய விலங்கு இல்லை என்பதனால் புல்லை ருசிக்க முடியாது. மாடுகள் மாமிசத்தை கடித்து ருசித்து சாப்பிட முடியாது. இந்த இரண்டுக்கும் தேவையான பல் அமைப்பை மனிதன் கொண்டிருப்பதன் காரணமாக தட்டைப்பல் மூலமாக அரைத்து மென்று சாப்பிடுகிறவனாகவும் மாமிசத்தை கடித்து பல்லால்அரைத்து சாப்பிடுகிறவனாக இருக்கின்றான்.. அதனால் தான் மனிதன் அவன் வசிக்கின்ற இடத்திற்கு தக தன்னுடைய உணவுகளை அங்கேயே இருக்கின்ற சூழல்களோடு இருக்கின்றவற்றை பயன்படுத்தி உண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

பொதுவாக சொல்வார்கள் பாம்பு திண்ணும் ஊருக்கு சென்றால் நடு துண்டு எனக்கு கொடு என்று கேட்க வேண்டும் என்பார்கள். எந்த ஊரில் என்ன உணவு கிடைக்கின்றதோ அங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலைக்கு தாக அந்த உணவை சாப்பிட்டால் தான் அந்தப் பகுதியில் வாழ முடியும். அரேபியாவுக்கு சென்றவன் ஒட்டக கறியையும் ஒட்டக பாலையும் பேரிச்சம் பழத்தையும் ஈச்சம் பழத்தையும் உண்ணக்கூடிய நிலையில் இருந்தால், அங்கு வாழ்வது இல்லை வசிப்பது சாதாரணமாக இருக்கும் .குளிர் பிரதேசங்களுக்கு செல்கிறவர்கள். அதற்கு தக கிடைக்கின்ற உணவுகளோடு மதுவையும் உண்டாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

 

நம்மூரில் சாதாரணமாக உடல் சோர்வாகவும் மனது சோர்வாகவும் இருக்கின்ற பொழுது உற்சாகம் தருவதற்காக தேநீர் அருந்துவது போன்று  வெளிநாடுகளில் மது என்பது ஒரு சாதாரண உணவில் ஒன்றாகத்தான் வைக்கிறார்கள். இங்கே மது என்பது போதையை வரவைத்து வாழ்க்கையை இழக்க செய்கின்ற நிலைப்பாட்டில் இருப்பதனால் ,மது அருந்துகிறவர்கள் தவறானவர்களாக கருதப்படுகிறார்கள். காரணம், இந்தியா  வெப்பத்தை அதிகமாக கொண்ட நாடு. அதனால், இங்குள்ள சீதோசன நிலைக்குக்காக இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டால் மட்டும்தான் ஆரோக்கியமாக நீடித்து நிலைபெற்று வாழ முடியும். இங்கு அதிகமாக மது அருந்துவதோ இல்லை புகை பிடிப்பதோ குளிர் பரதேசத்தில் செய்யக் கூடியவற்றை வெப்பப் பகுதியில் செய்தால் உடல் வலுவிழந்து நோய் பிடித்து மரணிக்க நேரிடலாம் என்பதனால் தான் இங்கு மது தவிர்க்கப்படுகிறது. புகை பிடிக்கிறது தவிர்க்கப்படுகிறது

. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கள் குடிக்கிற பழக்கம் இருந்திருக்கிறது .ஆனால், தென்னை மரத்தில் இருந்து வடித்தெடுக்கப்படுகின்ற.... பனை மரத்திலிருந்து வடித்தெடுக்கப்படுகின்ற... இல்லை, பச்சரிசியை அரைத்து பானையில் ஊற்றி புளிக்க வைத்து அதைகுடிக்கின்ற பழக்கம்... தொண்டு தொற்று வந்தது, காரணம். இது உடல் சூட்டை தணிக்க கூடியதாக இருந்ததின் காரணமாக -இதை ஒரு பெரிதாக இந்திய சமூகம் கருதவில்லை .ஆனால், பல்வேறு ரசாயன பொருட்களின் கலவையோடு போதை ஏற்றக்கூடிய ஆல்கஹாலை அதிகம் கலந்து மனிதர்கள் தன் நிலையற்ற வாழ்வை வாழ்வதற்கான வழியை செய்யக்கூடிய மதுவை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மது பழக்கம் உடையவர்களை அறவே வெறுத்து ஒதுக்கினார்கள்

.புகை பிடிப்பவர்களையும் அதன் பொருட்டே தள்ளி வைத்தார்கள் .ஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக- உலகளாவிய ஒரு தொடர்பு... சாதாரணமாக இன்றைக்கு வாழ்கின்ற மனிதர்களுக்கு கிடைத்ததின் காரணமாக எல்லாவற்றையும் உண்டு வாழ வேண்டும். அதை அனுபவிக்காமல் மரணித்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் இருக்கின்றவர்களின் காரணமாக இன்றைக்கு மதுவினுடைய விற்பனை மிக அதிகமாக வெப்ப நாடான இந்திய -தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது .இது மேற்கத்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு, அந்த வாழ்க்கையின், வேட்கையின் காரணமாக நம்மவர்கள் அதை பின்பற்ற வேண்டிய நெருக்குதல்களுக்கு ஆளாகி விட்டார்கள். ஆனாலும் இதை ஒரு சமுதாய ஒழுங்கினமாகவே கருதுவதை ....மதுவையும் புகைப்பிடித்தலையும் செய்கிறவர்களை விலக்குவதை நாம் பார்க்க முடிகிறது.   தான், இந்த பழக்கத்திற்கு அடிமையானதால், தன்னுடைய ஆரோக்கியம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் இதை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் உணவு என்பது உயிர் வாழ்வதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோரும் மிக கவனமாக இருக்கிறார்கள்

. குழந்தைகளுக்கு பாலும் நெய் கலந்த பருப்பு சாதமும் ஆறு மாதத்திற்கு பிறகு ஊட்டுகிறார்கள். பின்பு உருளைக்கிழங்கை வேகவைத்து மசிய கொடுப்பதும் முட்டைகளை வேகவைத்து  மசிய கொடுப்பதும்  - குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கான செயலை, அவர்கள் காலங்காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பருப்பு என்பது உணவில் முதன்மையான தானிய வகை. உணவுகளில் முதன்மையானது .இந்த பருப்பில் தான் வைட்டமின் ஏ ,பி, சி ,இ உள்ளது. இதில் கால்சியம் ,இரும்பு சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, ரத்த சர்க்கரை குறைப்பிற்கான சத்து, ரத்த கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கான வைட்டமின்கள் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க கூடிய சத்து இவைகள் எல்லாம் பருப்பில் உள்ளன குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் எளிதில் ஜீரணமாக கூடிய  கோதுமை  சப்பாத்தி, ரொட்டி, பிஸ்கட் போன்றவைகளில் ஜோவார் உள்ளது .இதில், பஜ்ரா, பார்லி, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவைகள் இருப்பதின் காரணமாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டிருப்பதனால், இவற்றை சாதாரணமாக உண்டு வருகிறார்கள். தென்னிந்திய அரிசி உணவில்  கார்போஹைட்ரேட்  அதிகமாக இருப்பதின் காரணமா......வட இந்தியாவில் நாா்ச்சத்துள்ள கோதுமை அந்நில அமைப்பிற்குரிய உணவாகிறது.

காய்கறிகளிலும் பழங்களிலும் பல்வேறு வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன .அவை, நம் உடலுக்கான ஆரோக்கியத்தை வழங்கக் கூடியவை.அவற்றில் ஆக்ஸிஜனேற்றி இருப்பதால், நம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோய்களை குறைக்க கூடிய சக்திகளை கொண்டிருக்கின்றன .விட்டமின் ஏ பீட்டா கரோட்டின், விட்டமின், சி. விட்டமின் இ இவற்றில் துத்தநாகம் பாஸ்பரஸ் ,போலிக் அமிலம்,  ஹோமோ சைஸ்டின் ரத்த அளவை கட்டுப்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளன. இதயத்தில் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய சத்துக்கள் பழங்களிலும் காய்கறிகளிலும் இருக்கின்றன .அதனால் பழங்களையும் காய்கறிகளையும் உணவாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழ முடியும். .

பழங்களிலும் காய்கறிகளிலும் கொழுப்பு, உப்பு ,சர்க்கரை குறைவாக உள்ளதோடு நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதினால் ,இவற்றை உண்ணும் பொழுது அதற்கான சத்து நம்மளுடைய உடம்பை சீராக வைத்திருப்பதை நாம் உணர முடியும்,. அதிகமாக சமைத்த உணவுகளை உண்ண தூண்டுவது போன்று பழங்களும் காய்கறிகளும் அப்படி ஒரு வேட்கையை கொடுக்காது என்பதனால் சமநிலையில் நம் வயிற்றை சீராக வைத்திருக்க முடியும் .அதன் மூலமாக ஆரோக்கியமும் சுறுசுறுப்பையும் நம் வாழ்க்கையில் பெற முடியும். உணவில் சமத்த உணவு அதிகமாக உட்கொண்டால் உடல் உள் உறுப்புகள் செரிமானம் சரியாக செய்யாமல் உடலில் நோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும் .ஆனால், காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக சாப்பிட்டால் எந்த விதமான தீங்குகளும் நிகழாது. பழங்கள்- காய்கறிகள் உடல் பருமனை உருவாக்காது. அது நல்ல செரிப்பு தன்மையை கொடுத்து எடையையும் குறைத்து கொலஸ்ட்ரால் ரத்த அழுத்தத்தை முற்றிலுமாக குறைப்பதோடு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையை நமக்கு உருவாக்கும். இவை நமக்கு ஒரு நோய் பாதுகாப்பை வழங்க கூடியவை.

காய்கறிகளிலும் பழங்களிலும் தான் ஆக்ஸிஜனேற்றி பைட்டோ கெமிக்கல் தாவர ரசாயனங்கள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். இவை நோய் நம்மை பிடிக்காமல் பாதுகாக்க துணை நிற்கக் கூடியவை. நாம் தொடர்ந்து பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தோமானால், நம் உடலுக்கும் உயிர் வாழ்வதற்கும் ஆபத்து என்பது மிக மிகக் குறைவு என்பதை உணர வேண்டும் .இவைகளை உண்ணும் பொழுது நமக்கு நீரழிவு, பக்கவாதம், இதய நோய் புற்றுநோய் ,கு டல், வயிறு, தொண்டை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்- உயர் ரத்த அழுத்தம்  ஏற்படாது என்பதை நாம் உணர வேண்டும் .

காய்கறிகளும் பழங்களும் விதைகளை கொண்டிருப்பதன் காரணமாக அவை ஆரோக்கியத்தை தரக்கூடியவை என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .இந்த காய்கறிகளையும் பழங்களையும் நாம் பச்சையாக உண்டோம் என்றால் அவற்றின் உண்மையான சுவைகளை நாம் ருசிக்க முடியும். ஆப்பிள் ,பேரிக்காய் ,சிட்ரஸ் ஆரஞ்சு திராட்சை பழம் எலுமிச்சம் பழம் பாதாம் பிளம்ஸ் வாழைப்பழங்கள் மாம்பழங்கள் பெரி ஸ்டார் பெரி,, ராஸ்பெரி, அவுரி நெல்லிக்காய்கள், கிவி பழம், முலாம்பழம், தர்பூசணி, ராக் , தக்காளி .கால சூழல்களுக்கு தகுந்தபடி விளையக்கூடிய பழங்கள் எல்லாம் நாம் சாப்பிட்டோம் என்றால், நம்மளுடைய உடல் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..

காய்கறிகளில் நமக்கு பல வகைகள் கிடைக்கின்றன  கீரை,  முட்டைகோசு, காலிபிளவர், ப்ரோக்கோலி ,பூசணி, வெள்ளரி  , உருளைக்கிழங்கு, இனிப்புவள்ளி கிழங்கு மற்றும் வெங்காயம், பூண்டு,பருப்பு வகைகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால்  இவை தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்களை விலக்கி -செரிமானத்தை தருகிறது. சோயா, சோயா பீன்ஸ், கொண்ட கடலை, பீன்ஸ், பட்டாணி, பச்சை பட்டாணி போன்ற பருப்பு வகைகளை நாம் நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால், ஆரோக்கியமான நன்கு சீரான உணவுகளை நம்முடைய அன்றாட.... அது சிற்றுண்டியாக இருந்தாலும்.... மதிய உணவாக இருந்தாலும்.... இரவு உணவாக இருந்தாலும் காய்கறிகளையும் பழங்களையும் பருப்பு வகைகளையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

.சமைக்காமல் காய்கறிகளையும் பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நேரம் கிடைக்கின்ற பொழுது அவற்றை சாப்பிட்டாலும் நம்மளுடைய உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். கூடுமானவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . .ஆகவே .உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அந்தந்த பருவ நிலைக்கு தேவையான காய்கறிகளையும் பழங்களையும் பருப்பு வகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டு உண்டு வாழ்ந்தால்... நல்ல ஆரோக்கியமான உடலை நாம் பெற்று நீண்ட காலமாக வாழ முடியும் .

நல்ல  உடலை பெற்று நீண்ட காலம் வாழ முடியும் .
 

Tags :

Share via