மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி மற்றும் ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம்,வடக்கு திட்டக்குளம் பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி ஆச்சியம்மாள் (63) இவரது கணவர் இறந்த நிலையில் இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ஆச்சியம்மாள் வழக்கம் போல நேற்று காலையில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீடு திரும்பும் பொழுது பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.ஆச்சியம்மாள் மற்றும் அவரது 17 ஆடுகளும் வடக்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் சிதலமடைந்த கட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர் இந்நிலையில் பலத்த இடி மற்றும் மின்னல் வெட்டியது இதில் சிதலமடைந்த கட்டிடத்தில் மின்னல் தாக்கியதில் ஆச்சியம்மாள் மற்றும் 14 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் உயிர் தப்பிய மூன்று ஆடுகள் மட்டும் மழை நின்றதும் வீட்டிற்கு சென்றுள்ளது.மூன்று ஆடுகள் மட்டும் வருவதைப் பார்த்த ஆச்சியம்மாளின் குடும்பத்தினர். ஆட்சியைத் தேடியுள்ளனர் அவர்கள் தேடிய பொழுது வடக்கு திட்டக்குளம் கண்மாய்க்கு எதிரேயுள்ள காட்டுப்பகுதியில் சிதலமடைந்த வீட்டில் ஆச்சியம்மாள் மற்றும் 14 ஆடுகள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆச்சியம்மாளின் குடும்பத்தினர். உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் ஆச்சியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து இறந்த ஆடுகளையும் கணக்கீடு செய்து கால்நடை மருத்துவருக்கு தகவல் வழங்கி ஆடுகளை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தவுள்ளனர்.மின்னல் தாக்கி ஆடுகள் மற்றும் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :