சென்னை பெரம்பூரில் நாலாவது ரயில் முனையம்.
சென்னையில், சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் 3 ரயில் முனையத்திலிருந்து ரயில். போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்,,புதிதாக நாலாவது ரயில்முனையம்,. பெரம்பூரில் 200ஏக்கர் பரப்பளவில் உள்ள லோகோ வொர்க்ஸ், லோகோ பணிமனை அருகே உள்ள கிடங்குகள் மொத்தமும் காலி செய்யப்பட்டு அங்கு ரயில் முனையம். அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.. 428 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு.. வேலை ஆரம்பிக்க உள்ளது. சென்னையில், பெருகி வரும் மக்கள் தொகை நெருக்கடியின் காரணமாக சென்ரலுக்கு அருகில் உள்ள பெரம்பூரில் இருந்து கோவை,,பெங்களுர், திருவனந்தபுரம் , வட இந்தியா முழுவதும் செல்வதற்கான ரயில் போக்குவரத்து முனையத்தை ஆரம்பிப்பது மூலமாக சென்ட்ரலுக்கு வந்து செல்லும் பயணிகளின் நெருக்கடி நிலை குறையும் .
தென்பகுதிக்கு செல்ல கூடிய ரயில்கள் எக்மோரில் இருந்தும் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படுவது போல் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் பெரம்பூர் முனையத்திலிருந்து இயக்கப்படுவதின் மூலமாக பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதி எளிதாக அமையும்..வில்லிவாக்கத்தில் அமைவதாக இருந்த இத்திட்டம் பெரம்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது .இதை தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
Tags :