என்எல்சியில் பயங்கர தீ விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2ஆவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தால் இயந்திரம் எரிந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேல்மண் நீக்கும் ராட்சத இயந்திரம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எனவே, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :


















