போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை கைது

by Admin / 06-02-2026 12:16:21pm
போதைப்  பொருள் பயன்படுத்தியதாக நடிகை கைது

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தெற்கு மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர் .அந்த சோதனையில் வெள்ளிமலை உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை அஞ்சு கிருஷ்ணன் மற்றும் உதவி இயக்குனர் வின்சி நிவேதா அவரது நண்பர்கள் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இவர்களிடமிருந்து மெத்தப்பட்டமைன், கஞ்சா, எல். எஸ். டி ஸ்டாம்ப் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கிருந்து போதைப் பொருள்களை வாங்கினார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

போதைப்  பொருள் பயன்படுத்தியதாக நடிகை கைது
 

Tags :

Share via