நடிகர் விஜய் 1.5 கோடி அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விஜய் புலி படத்தில் நடித்த போது பெற்ற சம்பளத்தில் 15 கோடியே முறையாக கணக்கில் காட்ட வழி எனக் கூறி வருமானவரித்துறை அவருக்கு 1.5 கோடி அபராதம் விதித்திருந்தது. 2015ல் விஜய் வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புலி படத்திற்காக அவர் பெற்ற கூடுதல் வருமானத்தில் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்து 2022 இல் அவருக்கு 1.5 கோடி அபராதம் மிதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .அந்த உத்தரவு சட்டரீதியான காலக்கடுவை தாண்டி பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
Tags :


















