வெட்கமே இல்லாமல் தலிபான்களை ஆதரிப்பதா? ஆதரிப்பவரின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்… பொங்கி எழுந்த முதல்வர்..!

by Admin / 20-08-2021 12:54:38pm
வெட்கமே இல்லாமல் தலிபான்களை ஆதரிப்பதா? ஆதரிப்பவரின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்… பொங்கி எழுந்த முதல்வர்..!

வெட்கமே இல்லாமல் தலிபான்களை ஆதரிப்பதா? ஆதரிப்பவரின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். ஜனநாயக முறையில் இல்லாமல் ஆயுதங்கள் முனையில் பல்வேறு மாகாணங்களை ஆக்கிரமித்து இறுதியில் தலைநகர் காபூலை கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அவர்களின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்தனர். இனி ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கு இடமே இல்லை எனவும் சூளுரைத்துள்ளனர். அவர்களின் கடந்த கால அடக்குமுறைகளுக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சிலரோ விமானங்களில் மேல் அமர்ந்து பயணித்த போது தவறி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், நாட்டில் சிலர் மனசாட்சி இன்றி தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக சமூகவலைதளங்களில் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பி ஷபிக்குர் ரஹ்மான் பர்க். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சுதந்திரத்துக்காகப் போராடுகிறார்கள் என்றும் அந்நாட்டு மக்களும் தலிபான்கள் தலைமையின் கீழ் இருக்க விரும்புகின்றனர் எனவும் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனை அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் பேசுகின்றனர். அங்கு குழந்தைகளுக்கு எதிராக தலிபான்கள் அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர். ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான்களை ஆதரிக்கின்றனர். ஆதரிப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

 

Tags :

Share via