23 தொகுதிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம் .-காங்கிரஸ் கட்சிதலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளில் எவை எவை அடையாளம் காணப்படும் பொருட்டு அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவோடு பேசி கடந்த தோ்தலில் போட்டியிட்ட 18 தொகுதிகளில் 16 தொகுதிகள் மீண்டும் கிடைத்திருப்பதாகவும் இரண்டு தொகுதிகள் தென்காசி, விருதாச்சலம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருப்பதாகவும் ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் வாங்கி இருப்பதாகவும் கன்னியாகுமரியில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.. பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர் ,ஈரோடு கிழக்கு ,உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி ,திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், குளச்சல்,கிள்ளியூர் , விளவங்கோடு,வேளச்சேரி இன்னும் மீதமுள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் 28 தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட 16 தொகுதிகளில்மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்ததாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் மற்றும் பேச்சுவார்த்தை குழுவினரும் உடன் சென்றிருந்தனர்.
Tags :



















